ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்தளவிலான வருவாய்கள் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்த போதிலும், இறக்குமதி செலவினம் விரிவடைந்தமையின் மூலம் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2021 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2022 சனவரியில் விரிவடைந்து காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியிலும் பார்க்க 2022 சனவரியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியினைக் காண்பித்திருந்த வேளையில், தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான தன்மையொன்று 2022 சனவரியில் பதிவுசெய்யப்பட்டது.
அதேவேளை, ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியினை 2022 சனவரியில் இலங்கை வெற்றிகரமாகத் தீர்த்திருந்தது. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்தான சார்க் நிதிய பரஸ்பர பரிமாற்றல் வசதியினது பெறுகையுடன் இம்மாத காலப்பகுதியில் வலுவடைந்து காணப்பட்டது.
சனவரியில் ரூ. 200 – 203 வீச்சினுள் காணப்பட்ட சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது 2022.03.07 முதல் நடைமுறைக்குவரும் வகையில் பாரியளவிலான நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதித்ததுடன் மேல்நோக்கி சீராக்கப்பட்டிருந்தது.
முழுவடிவம்
https://www.cbsl.gov.lk/sites/default/files/20220401_External_Sector_Performance_Jan_2022_t.pdf