இரண்டு வருடமாகக் கொரோனா காரணத்தால் கல்லூரிகள் முழுமையாக இயங்கப்படாத காரணத்தால் பெரும்பாலான தேர்வுகள் இணையத்தின் வாயிலாகவே நடத்தப்பட்டது. இதற்கிடையில் இண்டர்நெட் முழுவதும் கொரோனா பேட்ச் எனக் கிண்டல் செய்யப்பட்டும் வந்தது. இதனால் பல முன்னணி கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூவ் போன்ற பெரிய அளவில் நடக்கப்படவில்லை.
இதன் எதிரொலியாக இந்தியாவில் பல துறைகளில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகப்படியான பற்றாக்குறை நிலவி வருகிறது. இதைச் சமாளிக்கு நடப்பு ஆண்டில் நாட்டின் முன்னணி கல்லூரிகளில் இருக்கும் மாணவர்கள் பெரும் நிறுவனங்கள் தேடித் தேடி பணியில் அமர்த்தி வருகிறது.
இதன் வாயிலாக என்ஐடி மாணவிக்கு எப்போதும் இல்லாத வகையில் 1.6 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
என்ஐடி கல்லூரிகள்
இந்தியாவின் முன்னணி கல்லூரிகளில் ஐஐஎம், ஐஐடி-க்கு அடுத்தபடியாக இருப்பது என்ஐடி கல்லூரிகள் தான். பொதுவாகவே ஐஐடி கல்லூரிகளை ஒப்பிடுகையில் என்ஐடி கல்லூரிகளில் குறைந்த அளவிலான வாய்ப்புகளே கிடைக்கும், ஆனால் இந்த ஆண்டு நிலைமை மொத்தமாக மாற்றியுள்ளது.

என்ஐடி பாட்னா
என்ஐடி பாட்னா கல்லூரியில் வரலாறு காணாத வகையில் ஐஐடி கல்லூரிக்கு இணையாக 1.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக இக்கலூரியின் டிரைனிங் மற்றும் பிளேஸ்மென்ட் செல் தெரிவித்துள்ளது.

அதிதி திவாரி
என்ஐடி பாட்னா கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பாட பிரிவைச் சேர்ந்த அதிதி திவாரி என்ற மாணவி சுமார் 1.6 கோடி ரூபாயில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார். இவருடைய தந்தை டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஊழியர், தாய் அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.

எந்த நிறுவனம்
என்ஐடி பாட்னா கல்லூரியில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 110 சதவீதம் பிளேஸ்மென்ட் பெற்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. அதிதி திவாரி-க்கு முன்பு என்ஐடி பாட்னா கல்லூரியில் மாணவர்களுக்குக் கிடைத்த அதிகப்படியான சம்பளம் 50-60 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே. மேலும் அதிதி திவாரி எந்த நிறுவனத்தில் தேர்வாகியுள்ளார் என்பதை என்ஐடி பாட்னா கல்லூரி நிர்வாகம் அறிவிக்கவில்லை.

கேம்பஸ் பிளேஸ்மென்ட்
2022ஆம் ஆண்டுக் கேம்பஸ் பிளேஸ்மென்டில் என்ஐடி பாட்னா கல்லூரி 5 ஆண்டுச் சாதனைகளை முறியடித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் கடந்த 2 வருடமாகப் பல ஐஐடி, என்ஐடி மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற முடியாமல் தவித்த நிலையில் இந்த ஆண்டு மிகவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து கேம்பஸ் பிளேஸ்மென்ட் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
After covid impacted campus placement NIT Patna Aditi Tiwari got job with Rs 1.6 crore salary package
After covid spread impacted IIT and NIT college campus placements, Now NIT Patna Aditi Tiwari got job with Rs 1.6 crore salary package which is highest ever salary offered for NIT Patna students 1.6 கோடி ரூபாய் சம்பளம்.. அசத்தும் என்ஐடி மாணவி..!