வெற்றிகரமாக நடப்பு நிதியாண்டில் காலடி எடுத்து வைத்தாகி விட்டது. இந்த ஆண்டில் எந்த பங்கினை வாங்கலாம். எது நல்ல லாபம் கொடுக்கலாம்.
தற்போது நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. பல நிறுவனங்களும் கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியினை எட்டத் தொடங்கியுள்ளன.
3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?!
இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட நல்ல குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
என்னென்ன பங்குகள்?
அந்த வகையில் இன்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்த சில பங்குகளை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
நவீன் ஃப்ளூரின், இந்தஸ் இந்த் வங்கி,டாடா மோட்டார்ஸ், ஹெ.டி.எஃப்.சி லைஃப், கிரானுல்ஸ், கோல் இந்தியா, தீபக் நைட்ரேட் உள்ளிட்டபங்குகளைத் தான் பரிந்துரை செய்துள்ளது.
தீபக் நைட்ரேட்
தீபக் நைட்ரேட் நிறுவனத்தின் பங்கு விலையானது தரகு நிறுவனத்தின் சிறந்த தேர்வாக உள்ளது. இதன் இலக்கு விலை 2620 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் 2020 ரூபாயாகும்.
மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனத்தின் பங்கு விலையானது சந்தையில் நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றன. குறிப்பாக கெமிக்கல் மற்றும் உர நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றன.
தீபக் நைட்ரேட் இலக்கு விலை
இதற்கிடையில் தான் தீபக் நைட்ரேட் நிறுவனத்தின் பங்கு விலையானது புதிய உச்சத்தினை எட்டலாம். கடந்த ஆண்டு இப்பங்கின் விலையானது கிட்டதட்ட 3000 ரூபாயினை எட்டிய நிலையில், அதன் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 45% சரிவினைக் கண்டுள்ளது.
எனினும் கடந்த சில தினங்களாக இந்த விகிதமானது அதிகரித்து வருகின்றது. இது புதிய ஆர்டர்கள் எடுப்பதையே சுட்டி காட்டுகின்றது. ஆக இந்த பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது. சீனாவின் கட்டுப்பாடு காரணமாக சமீப காலமாக கெமிக்கல் துறையில் தேவையானது பலமாக இருந்து வருகின்றது.
நவீன் ஃப்ளூரின் & இந்தஸ்இந்த் வங்கி
நவீன் ஃப்ளூரின் – இந்த பங்கினை 3950 – 3985 என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை 4625 ரூபாயாகும். ஸ்டாப் லாஸ்- 3160 ரூபாயாகும்.
இந்தஸ்இந்த் வங்கி – இந்த பங்கினை 905 – 925 என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை 1078 ரூபாயாகும். ஸ்டாப் லாஸ் – 830 ரூபாயாகும்.
டாடா மோட்டார்ஸ் & ஹெ.டி.எஃப்.சி லைஃப்
ஹெ.டி.எஃப்.சி லைஃப் – இந்த பங்கினை 428 – 438 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை 515 ரூபாயாகும். ஸ்டாப் லாஸ்- 389 ரூபாயாகும்.
கிரானுல்ஸ் – இந்த பங்கினை 308 – 314 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை 363 ரூபாயாகும். ஸ்டாப் லாஸ்- 284 ரூபாயாகும்.
கோல் இந்தியா – இந்த பங்கினை 190 – 194 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை 230 ரூபாயாகும். ஸ்டாப் லாஸ்- 171 ரூபாயாகும். (இதற்கு 3 மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளது)
stock recommendations: 7 stocks to buy now for good upside in 3 months
stock recommendations: 7 stocks to buy now for good upside in 3 months/3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. 7 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..!