அவகடோ பழத்திலிருந்து தயாரிக்கப்படும் அவகடோ எண்ணெய், அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் காரணமாக இந்த நாட்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. தோல் மற்றும் கூந்தலுக்கும் இந்த எண்ணெயை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம், லெசித்தின், ஆரோக்கியமான கொழுப்பு உள்ளடக்கம் மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அவகடோ எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
அவகடோ எண்ணெய் ஏன் மிகவும் தனித்துவமானது?
அவகடோ எண்ணெய் எந்த உணவிற்கும் வித்தியாசமான சுவையை சேர்க்கிறது. இதனால், பிற சமையல் எண்ணெய்களுக்கு பதிலாக இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. அவகடோ எண்ணெயில் உள்ள ஒலிக் அமிலம்’ ஆக்சிஜனேற்றத்திற்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது. அதாவது உங்கள் அலமாரியில் உள்ள பல எண்ணெய்களைப் போல இது சீக்கிரம் கெட்டுப்போகாது.
மேலும், அவகடோ எண்ணெய் அதிக ஸ்மோக் பாயிண்ட்டைக் கொண்டுள்ளது அதனால் அதன் ஆரோக்கிய நன்மைகளை இழக்காமல் அதிக வெப்பநிலையைத் தாங்கும்.
அவகடோ எண்ணெயின் நன்மைகள்
உடல் நச்சுத்தன்மையை நீக்குவதிலிருந்து இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைப்பது வரை, எடை இழப்புக்கு அவகடோ எண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி, இது சுருக்கங்கள் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். மேலும், இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவகேடோ எண்ணெய்யின் சில நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அவகடோ எண்ணெயில் அதிகளவு மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன, அவை பல முக்கிய கொழுப்பு-கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவும்.
இந்த எண்ணெயில் குளோரோபில் உள்ளது, இது மெக்னீசியத்தின் இயற்கையான மூலமாகும் மற்றும் சிறுநீரகங்கள், மூளை மற்றும் பிற உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளில் இருந்து பாதரசம் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்களை இயற்கையாகவே நீக்குகிறது.
இது கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணெய். இந்த எண்ணெயை உங்கள் உணவில் சேர்ப்பது ‘கெட்ட’ கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
அவகடோ எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. இது ஒரு அழற்சி எதிர்ப்பு எண்ணெயாகும், இது தமனிச் சுவர்களில் சேதத்தைத் தடுக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
உங்கள் உடல் வைட்டமின் ஈ-யை’ சப்ளிமெண்ட்ஸை விட இயற்கை உணவு மூலங்களிலிருந்து மிகவும் திறமையாக உறிஞ்சுவதால், உங்கள் உணவில் அவகடோ எண்ணெயைச் சேர்ப்பது ஒரு நல்ல தேர்வாகும்.
அவகடோ எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் ஒலிக் அமிலம் நிறைந்துள்ளது, இது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
மேலும், அவகடோ எண்ணெயில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புற்றுநோய் செல்கள், குறிப்பாக மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயை உண்டாக்கும் வளர்ச்சியை மெதுவாக்க உதவும். இதில், புற்றுநோய்க்கு எதிரான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குளுதாதயோனும் உள்ளது.
நீங்கள் வேறு எந்த சமையல் எண்ணெயைப் போலவே இதைப் பயன்படுத்தலாம். அவகடோ எண்ணெயை காய்கறிகளை வறுக்கவும், இறைச்சியை மரைனேட் செய்யவும், சாலட் டிரஸ்ஸிங் செய்யவும், பேக்கிங்கிற்கு பயன்படுத்தவும், மயோனைஸ் மற்றும் ஸ்மூத்தி செய்யவும் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“