Petrol and Diesel Price: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.108.21க்கும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.98.21க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu updates: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்குவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் விடுவிப்பு
அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்களின் பணிக்காலம் நிறைவு பெற்றது.
மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட அனைத்து மருத்துவர்களையும் பணியில் இருந்து சுகாதாரத் துறை விடுவித்தது.
1,800 மருத்துவர்கள் மாற்று பணிவாய்ப்பு வழங்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜி.எஸ்.டி வசூல் அதிகரிப்பு
சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் மார்ச் மாதத்தில் ரூ. 1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 45.6 சதவீதம் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.
World news update: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை; இலங்கையில் நீடிக்கும் குழப்பம் ஆகியவை காரணமாக அதிபர் இல்லத்துக்கு முன் அரங்கேறிய வன்முறையில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.
IPL update: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 138 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பெட்ரோல், டீசல் மற்றும் சுங்க கட்டண உயர்வால் லாரிகளின் வாடகை உயர்ந்தது. லாரிகள் வாடகை உயர்வால் கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்தது. காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்தது.
டெல்லியில், திமுக அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மத்திய அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவை எதிர்ப்பது, அக்கட்சியின் மீதான தனிப்பட்ட வெறுப்பு அல்ல, பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர, தனிப்பட்ட நபர்களை அல்ல. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒன்று திரட்டி பாஜகவை ஓரங்கட்டிவிட்டன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். கிறிஸ் ராக்கை விழா மேடையில் அறைந்தது சர்ச்சையான நிலையில் விலகியுள்ளார்.
சென்னை, பல்லாவரம் மறைமலையடிகள் பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.