நியூயார்க்: அமெரிக்காவில் இந்துக்களை கவுரவிக்கும் வகையில் கணேஷ் கோயில் தெரு என பெயரிடப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க் நகரின் வட மத்திய பகுதியில் குயூன்ஸ்7 கம்யூனிட்டி மாவட்ட பிளஷ்சிங் நகரில் ஹோலி அவன்யூ , 45 வது அவன்யூ இடையில் அமைந்துள்ளது பெளனி தெரு. இந்த பகுதியின் சுற்றுபகுதியில் கொரியா, தைவான் மற்றும் இந்திய கலாசார மையங்கள் , வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளன. இங்கு வல்லப கணபதி தேவஸ்தானம் என்ற பெயரில் ஒரு கோவிலும் உள்ளது. இங்கு பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். முக்கிய திருவிழாக்களில் அமெரிக்க வாழ் இந்து பக்தர்கள் அதிகம் கூடுவர்.
இந்துக்களை கவுரவிக்கும் வகையில் அமெரிக்கா , இந்த பெளனி தெருவுக்கு கணேஷ் கோயில் என்று பெயரை மாற்றி முறையான தகவல் பலகையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு நியூயார்க் சிட்டி கவுன்சில் உறுப்பினர் பீட்டர் ஏ. கூ. தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவுன்சில் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்தகவலை அவரே சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை வட அமெரிக்காவின் இந்து டெம்பிள் சொஷை ட்டியும் உறுதி செய்துள்ளது. முறைப்படி அங்கீகரிக்கப்பட்டவுடன் சிட்டி கவுன்சில் வரைபடத்திலும் இந்த கணேஷ் கோயில் தெரு பெயர் இடம்பெறும்.
Advertisement