‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கிய ராம்பாலாவின் மூன்றாம் படம் இது.
மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவி மரியா, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சீன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குநரின் முதல் இரண்டு படங்களைப்போலவே தான் இதுவும் இருக்கிறது. தில்லுக்கு துட்டு 3 என வைத்திருக்கலாம். முந்தைய இரண்டிலும் சந்தானம் நாயகன். இதில் மிர்ச்சி சிவா நாயகன் என்பதால் தலைப்பை மாற்றி விட்டார்கள் போலிருக்கிறது.
கதை என்று ஏதுமில்லை. படப்பிடிப்பின் போது, தோன்றுவதை எல்லாம் எடுத்தது போல இருக்கிறது.
எல்லாமே, ‘அவிட்டு’ ஜோக்குகள்.
உதாரணம்..
கார் ஒன்றில் பெண் அணியும் துப்பட்டா இருக்கிறது. கடத்தல் கும்பலின் தலைவரிடம், இன்னொருவர், ‘பாஸ் துப்பட்டா’ என்கிறார். அதற்கு தலைவர் ‘இங்கே துப்பாத, கொஞ்சம் தள்ளி துப்பு” என்கிறார்.
நாயகன் மிர்ச்சி சிவா சாதாரணமாக வந்து போகிறார். இந்தப் படத்தில்தான் இயல்பாக நடித்திருக்கிறார். மனநலம் சரியில்லாதவராக வருகிறார்.
(படத்தில் ஆளாளுக்கு பயித்தியம் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இது தவறு என இயக்குநருக்கோ மற்றவர்களுக்கோ தெரியாதா?)