இந்தியாவுக்கு வருகை தரும் டிம் ஹார்ட்டன்ஸ்.. 300 இடங்களில்.. எங்கெங்கு?

டிம் ஹார்ட்டன்ஸ் 1964ல் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில், ஆரம்பிக்கப்பட்ட ஒரு காஃபி ஷாப் ஆகும். ஆனால் இன்று பல ஆயிரம் உணவகங்களையும் கொண்டுள்ளது.

உலகின் பல நாடுகளிலும் சுவை மிகு காஃபிக்காக பேர் போன டிம் ஹார்ட்டன்ஸ், தற்போது இந்தியாவில் காலடி வைக்க உள்ளது.

கொரோனாவின் காரணமாக தாமதமாக இந்திய சந்தையில் நுழையும் ஹார்ட்டன்ஸ், தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும்பொருட்டு ஸ்டார்பக்ஸ்-ன் இந்தியாவின் முன்னாள் முதலாளியான நவீன் குர்னானியுடன் இணைந்துள்ளது.

இந்தியாவுக்கு என்ன வேண்டுமோ, நாங்க கொடுக்கிறோம் – செர்ஜி லாவ்ரோவ் உறுதி

 எப்போது தொடக்கம்

எப்போது தொடக்கம்

நவீன் ஏற்கனவே காஃபி சந்தையில் அனுபவம் மிக்க ஒருவராக உள்ளவர். முதலில் டெல்லி, பிறகு பஞ்சாப், சண்டிகர் மற்றும் பின்னர் மேற்கு இந்தியாவிலும் கடைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 120 கடைகளையும், அடுத்த 5 ஆண்டுகளில் 250 – 300 கடைகளையும் திறக்க திட்டமிட்டுள்ளோம். ஜீன்- ஜீலைக்குள் இந்தியாவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

நேரடியாக போட்டி

நேரடியாக போட்டி

ஸ்டாப் பக்ஸ், காஸ்டா காஃபி மற்றும் கஃபே காஃபி டே உள்ளிட்ட உணவு சங்கிலி நிறுவனங்களுடன் நேரடியாக போட்டி போடும். இதற்காக நாட்டின் டெல்லியில் மத்திய இடத்தில் முதன்மை கடையை தொடங்குவதற்கான இடத்தை தீவிரமாகத் தேடி வருகிறது.

 பஞ்சாப்- ல் ஏன்?
 

பஞ்சாப்- ல் ஏன்?

வட இந்தியாவில் எங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது, கனாடாவில் அதிக எண்ணிக்கையிலான பஞ்சாபிகள், NRI-க்கள் இருப்பதால் பஞ்சாப் எங்கள் கடைகளை ஆரம்பத்தில் அறிமுகம் செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நவீன் கூறியுள்ளார்.

இந்தியாவில் விரிவாக்கம்

இந்தியாவில் விரிவாக்கம்

காஃபி சங்கிலி நிறுவனம் தற்போது உலகளவில் 5100 இடங்களில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தனது பிராண்டினை தொடங்குவதன் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பிராண்டின் 4வது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் காஃபி நுகர்வு அதிகரித்து வரும் நிலையில், ஹாட்டன்ஸ் இப்படியொரு முடிவினை எடுத்திருக்கலாம். மேலும் காஃபி பார் மட்டும் அல்ல, உணவு சந்தையிலும் காலடி எடுத்து வைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Coffee chain tim Hortons plans to launch in india

Coffee chain tim Hortons plans to launch in india/இந்தியாவுக்கு வருகை தரும் டிம் ஹார்ட்டன்ஸ்.. 300 இடங்களில்.. எங்கெங்கு?

Story first published: Sunday, April 3, 2022, 18:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.