கடந்த 2003 ஆம் ஆண்டு உலகெங்கிலும் கேரட் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது.உலகம் முழுவதும் உள்ள கேரட் ஆர்வலர்களின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி, சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 4, 2012 அன்று பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம் இந்த நாள் மிகவும் பிரபலமாகி வருகிறது. தற்போதைய கால கட்டத்தில் உலகளவில் கேரட் ஊதா, சிவப்பு மற்றும் வெளிர் மஞ்சள் என பல்வேறு வண்ணங்களில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன.
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. உணவு வகையிலும், மருத்துவத்திலும் பல்வேறு பயன்களை தரவல்லது கேரட். மலைப்பகுதிகளில் விளையும் கிழங்கு வகையை சார்ந்தது. இந்தியாவிற்கு மேலை நாட்டினரால் கொண்டுவரப்பட்ட ஒரு காய் வகையாக காரட் இருக்கிறது.
கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது. இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்.
கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், லுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். தினமும் கேரட்டை தோலை சீவி சாப்பிடலாம். சீவிய தோலை அரைத்து உடலில் தடவினால் வெயிலால் ஏற்படும் வேர்குரு, சிவப்பு தன்மை நீங்கும்.
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. தினம் பணிகளுக்கு சென்றுவிட்டு சோர்வாக வீடு திரும்பினாலோ அல்லது வீட்டுவேலைகளை முடித்து சோர்வாக இருந்தாலோ கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடல் சோர்வு உடனடியாக நீங்கும்.
Advertisement