இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளித்த மக்கள்! அவசர அவசரமாக கோட்டாபயவை சந்திக்கவுள்ள மகிந்த



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசரமாக இன்று இரவு  சந்திக்கவுள்ளார். 

நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இதன்போது பிரதமர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, சர்வகட்சிகளை இணைத்து இடைக்கால  அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விடுத்த கோரிக்கைக்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பொருட்கள் பற்றாக்குறை, அதிகரித்த விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக பொதுமக்கள் கடும் சினம் கொண்டு வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

ஊரடங்குச் சட்டம் மற்றும்  பொது அவசரகால நிலை போன்ற சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் வீதிக்கு இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை நிறுத்தவில்லை. 

இதேவேளை, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு பேரணிகளை நடத்தி வருகின்றனர். 

மேலும், அரசில் உள்ள சில இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில்  அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சில கட்சிகள் அரசில் இருந்து வெளியேறுவது தொடர்பில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றர். 

போராட்டங்களின் தீவிரத் தன்மை காரணமாக நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடை இன்று மாலை நீக்கிக் கொள்ளப்பட்டது. 

தற்போதைய நிலைமையின் தீவிரத்தால் பொதுமக்கள் கொந்தளித்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.