வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கையில், 26 கேபினட் அமைச்சர்களும் பதவி விலகி உள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக் ஷே, அதிகர் கோத்தபய ராஜபக் ஷே இருவர் மட்டுமே தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இதுகுறித்து கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனே செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிபர் கோத்தபய ராஜபக் ஷே மற்றும் அவரது மூத்த சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக் ஷேவைத் தவிர 26 அமைச்சர்களும் பதவி விலகி உள்ளனர். அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளதால், அதிபர் புதிய அமைச்சரவையை அமைக்க முடியும். மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ராஜபக் ஷேவின் குடும்ப உறுப்பினர்களான நிதி அமைச்சர் பசில், விவசாயத்துறை அமைச்சர் சமல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஞாயிறு ஊரடங்கையும் மீறி, இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement