வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு; இலங்கையில் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் நேற்று ஏப்.02 மாலை 6 மணி முதல் திங்கள் (ஏப்.04) காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அந்நாட்டில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன
இலங்கையில் அன்னியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுடன், மின் வெட்டும் இலங்கை மக்களை கோடை வெயிலில் வாட்டி வதைக்கிறது. தினமும், 13 மணி நேரம் மின் வெட்டு அமலில் உள்ளது.
இதனால், இலங்கை அரசு மீது, மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை நூற்றுக்கணக்கானோர் நட்த்திய போராட்டம் வன்முறையாக மாறி வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது.
இதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் விலக்கி கொள்ளப்பட்டது. மக்கள் போராட்டம் தொடர்வதால், அந்நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இந்நிலையில் அந்நாட்டில் சமூக ஊடகங்களான யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.
Advertisement