இலங்கையில் மீண்டும் செயல்படத் தொடங்கிய சமூக வலைதளங்கள்..!

கொழும்பு,
இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால்  மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் நாளை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி கொழும்புவில் மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இருட்டையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். 
முன்னதாக தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியாகவும், நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கு மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ-டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களுக்கான அணுகலையும் இலங்கை அரசாங்கம் முடக்கி வைத்திருந்தது
இந்நிலையில் இலங்கை முழுவதும் சமூகவலைதளங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.