இலங்கையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட நபர்கள் பதவி விலக வேண்டும் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
இலங்கை நெருக்கடி குறித்து ஜெயவர்தனே வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் ஊரடங்கு மற்றும் அவசர சட்டத்தை பார்ப்பதற்கு நான் வருத்தப்படுகிறேன்.
போராட்டம் செய்ய அனைத்து உரிமைகளும் இருக்கும் மக்களின் தேவைகளை அரசாங்கம் புறக்கணிக்கக் கூடாது.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த இலங்கை வழங்கறிஞர்களின் துணிச்சல் குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
உண்மையான தலைவர்கள் தவறுகளை ஏற்றுக்கொள்வார்கள். நமது நாட்டு மக்களை பாதுகாக்க, அவர்களின் துன்பங்களில் ஒன்றுபட வேண்டிய பெரியளவிலான அவசரம் உள்ளது.
கோட்டாபய அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த இலங்கை முன்னாள் கேப்டன்! வீடியோ ஆதாரம்
இந்த பிரச்சனைகள் மனிதனால் ஏற்படுத்தப்பட்டது, இதை சரியான தகுதியான நபர்கள் மூலம் சரி செய்துவிடலாம்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட நபர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர், தற்போது அவர்கள் பதவி விலக வேண்டும்.
பின் நாட்டிற்கு நம்பிக்கை மற்றும் உறுதி அளிக்கும் ஒரு நல்ல குழு தேவை.
இனியும் வீணடிக்க நேரமில்லை.
— Mahela Jayawardena (@MahelaJay) April 3, 2022
பணிவாக சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது, சாக்கு போக்குக்கானது அல்ல என மஹிலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.