உக்ரைனில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு ரயில் மூலமாக போலந்து எல்லையில் உள்ள டவுணுக்கு வந்து சேர்ந்தனர்.
சூட்கேஸ்கள் உடைமைகளை சுமந்து வந்த அகதிகளை போலந்து எல்லை அதிகாரிகள் வழிநடத்திச் சென்று அவர்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைத்தனர்.
சொந்த பந்தங்களைக் கண்டு அந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தியும் கட்டியணைத்தும் அன்பைப் பரிமாறிக் கொண்ட காட்சி காண்போரை நெகிழ வைத்தது.வானில் இருந்து குண்டுகள் பொழிந்த யுத்த பூமியில் இருந்து உயிர்தப்பி வந்த கதைகள் அவர்களிடம் நிறையவே இருந்தன.