உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் மக்கள் சென்றனர். அப்போது தெருக்களில் பலரது உடல்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
புச்சாவில் ஒரு தெருவில் 20 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று புச்சா மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்தார். மேலும் அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றையும் தெரிவித்தார்.
புச்சா பகுதியில் 300 பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு உள்ளனர். நகர தெருக்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. சாலைகளில் உடல்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் ஒரே இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி உடல்களை புதைத்தோம் என்றார். இவர்கள் ரஷிய படையால் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இர்பின் பகுதியில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.