சென்னை:
எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன பெற்றுள்ளோம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என்றும் எட்டு ஆண்டுகளில் மோடி அரசு எரிபொருள் வரியாக இருபத்தி ஆறு லட்சத்து ஐம்பது ஒன்ராயிரத்து தொள்ளயிரத்து பத்தொன்பது ரூபாய் வசூல் செய்துள்ளது. நாட்டில் தோராயமாக இருபத்தி ஆறு கோடி குடும்பங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் எரிப்பொருள் வரி வசூல் செய்யபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.