நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று பல தனியார் வங்கிகள் எச்சரித்துள்ளன.
இது குறித்து இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகள் தமது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
ATM/CRM/CDM இயந்திரங்களில் சேவைத் தடங்கல்களை சந்திக்க நேரிடலாம் என்பதையும், மின்சார விநியோகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமாக எங்கள் சில கிளைகள் மூடப்படலாம் எனவும் வங்கிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திரங்களுக்கான தற்காலிக மின்பிறப்பாக்கிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய டீசல் வழங்கப்பட வேண்டும் என்பதால், தற்போதைய மின் தடைகள் காரணமாக சவால்களை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம், மேலும் எந்தவொரு சிக்கலையும் தவிர்க்க எங்கள் டிஜிட்டல் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களை வலியுறுத்துவதாக, தனியார் வங்கிகள் குறிப்பிட்டுள்ளன.
சில மணிநேரங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின்பிறப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெரும்பாலான இயந்திரங்களுக்கு மூன்று முதல் நான்கு மணிநேரம் மின்சாரம் வழங்க முடியும்.
எனினும், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டு காரணமாக, மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படுவதற்கு முன்பே பல மின்பிறப்பாக்கிகள் செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.