ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி அசத்திவரும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்சா தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப்பெற்றுள்ளர்.
இந்த ஆண்டு நடைபெற்ற வீரர்களுக்கான ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு இலங்கை வீரர் பனுகா ராஜபக்சா ஒப்பந்தம் ஆகி இருந்தார்.
பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 43 ஓட்டங்கள் எடுத்து அணியை 19 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைய உதவி செய்தார்.
Lankan on the front, getting ready for the hunt #SaddaPunjab #IPL2022 #PunjabKings #ਸਾਡਾਪੰਜਾਬ #KingsUncut @BhanukaRajapak3 pic.twitter.com/y021G0YrnU
— Punjab Kings (@PunjabKingsIPL) March 31, 2022
அதனை தொடர்ந்து, பஞ்சாப் அணி விளையாண்ட இரண்டாவது போட்டியிலும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்சா அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 31 ஓட்டங்கள் குவித்தார், இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தாலும் பனுகா ராஜபக்சாவின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்திற்கு முன்பே குடும்ப சூழ்நிலை காரணமாக 30 வயதே ஆன இலங்கை வீரர் பனுகா ராஜபக்சா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்து இருந்தார்.
இந்தநிலையில், தற்போது இந்த அறிவிப்பை இலங்கை வீரர் பனுகா ராஜபக்சா திரும்ப பெற்றுள்ளார், 2019ம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு அறிமுகமான பனுகா ராஜபக்ச, இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்கள் உட்பட 320 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.