கரோனா புதிய திரிபான எக்ஸ்இ வேகமாக பரவும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ மற்ற வகைகளைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் உலகம்முழுவதும் பரவி வருகிறது. இது அவ்வப்போது உருமாறிக் கொண்டே இருக்கிறது. இந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ பரவி வரகிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என டபிள்யூஎச்ஓ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டபிள்யூஎச்ஓ விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ எனப்படும் கரோனா வைரஸின் புதிய திரிபானது, 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது.

தற்போது வரை, ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு கரோனாவைரஸ்களில் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்டது. எக்ஸ்இ தொடர்பான இந்த புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கரோனா வகையாக இருக்கும்.

தற்போது ஒமைக்ரானின் பிஏ.2துணை திரிபு உலகின் பல்வேறுபகுதிகளில் பரவி வருகிறது, அமெரிக்காவிலும் பெரும்பாலானபிஏ.2 பாதிப்புகள் கண்டறியப்பட் டுள்ளன.

இங்கிலாந்தில்..

தற்போது கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ எனும் புதிய மாறுபாடு, ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும். இது ஜனவரி19-ல் இங்கிலாந்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. மேலும்600-க்கும் குறைவான பாதிப்புகள்இதுவரை உறுதிப்படுத்தப்பட் டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனாதொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பானது மக்களிடையே புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் எக்ஸ்டி வகையிலான திரிபுகள் பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டது. எக்ஸ்எஃப் வகை திரிபானது பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.