காஜியாபாத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ரூ.22 லட்சம் கொள்ளை

காஜியாபாத் மசூரி பகுதியில் உள்ள அரிஹந்த் பெட்ரோல் பங்க்கில்  நுழைந்த ஆசாமிகள் ஊழியர்களிடம் இருந்து துப்பாக்கி முனையில் ரூ.22 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காஜியாபாத்தின் நஹல் சாலை வழியாக சென்ற முகேஷ் என்ற கொள்ளையனை என்கவுண்டரில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். முகேஷிடம் இருந்து ரூ.10 லட்சம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தலைமறைவான சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்தை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்- இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.