திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, கேரளாவில் இன்று புதிதாக 310 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 458 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தாக்குதலுக்கு இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது