இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதனிடையே, ஏப்ரல் 2 மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை ஏப்ரல் 4 அதிகாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
அதுமட்மின்றி, ஏப்ரல் 2ம் திகதி இரவு முதல் இலங்கையில் சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பில் நடந்த அரங்காத்திற்கு எதிரான போராட்டத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் Roshan Mahanama ஈடுபட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியும், அன்பும்…! சீமான்
Roshan Mahanama போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Former Cricketer Roshan Mahanama joins protest in Colombo #SriLanka pic.twitter.com/8RFcjcBUhx
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) April 3, 2022
அதில், போராட்டத்தின் அங்கமாக சாலை ஓரத்தில் மக்களுடன் மக்களாக Roshan Mahanama நின்று கொண்டிருக்க, பொலிஸ் அதிகாரி ஒருவர் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி தொர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வனிந்து ஹசரங்க, முன்னாள் கேப்டன் சங்கக்கார, சனத் ஜெயசூர்யா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.