சீனாவில் முதன் முதலாக தோன்றிய கோவிட் 19, தற்போது பலவாறு உருமாற்றம் அடைந்து, மீண்டும் சீனாவில் குடிகொண்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில், சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது.
குறிப்பாக சீனாவின் பல முக்கிய நகரங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
சீனாவில் கடுமையான லாக்டவுன்.. உலக நாடுகள் அச்சம்.. ஏன் தெரியுமா?
ஜீரோ கோவிட் பாலிசி
இதனிடையே சீன அரசு கொரோனாவினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜீரோ கோவிட் பாலிசியினை அமல்படுத்திடுள்ளது. இதன் காரணமாக மக்கள் எழுதில் கொரோனாவில் இருந்து மீண்டு வர முடிகின்றது. இதனால் மக்களின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டு வருகின்றது என்பது மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்பட்டாலும், மறுபுறம் சீன அரசின் கடுமையான நடவடிக்கை காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடுமையான நடவடிக்கை
சீனா தொடர்ந்து அங்கு கொரோனாவின் தாக்கத்தினை குறைப்பதற்காக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக ஜீரோ கோவிட் பாலிசி அடிப்படையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என அந்நாட்டு சுகாதாரத்துறை ஆணையத்தின் இணை அமைச்சர் வான் ஹென்செங் கூறியிருப்பது, சீன மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான நடவடிக்கை
இக்கொள்கை மூலம் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள இடங்களை தீவிரமாக கண்காணித்து, அங்கிருந்து வேறு இடங்களுக்கு தொற்று பரவாத வகையில் தடுப்பதன் மூலம், முடிந்த அளவு விரைவாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தப்படும் என்று அந்த நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தாக்கம் இருக்கும்
சீனா தொடர்ந்து வைரஸினை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும். ஜீரோ கொவிட் பாலிசியுடன் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் இரண்டையும் சமமாக கொண்டு செல்லும் தெளிவான பாதை இருந்தால் மட்டுமே அதனை சமாளிக்க முடியும். மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக பொருளாதாரம் நிச்சயம் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை எதிர்கொள்ளும்.
பொருளாதாரம் சரியலாம்
இதிலிருந்து சீனா எப்படி முன்னேற முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கிடையில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையில் லாக்டவுன் மத்தியில் சுகாதார செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் பொருளாதார வளர்ச்சியை 1.6% ஆக குறைக்கலாம். இது மத்திய வங்கிகளை வட்டி விகிதத்தினை படிப்படியாக உயர்த்த வழிவகுக்கலாம்.
ஜிடிபி சரியலாம்
இரண்டாவது கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு லாக்டவுன் மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 16 மில்லியன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் 20 மாகாணங்கள் முடங்கியிருக்கும் நிலையில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70% பாதிக்கலாம் என்ற பிரச்சனை எழுந்துள்ளது.
நுகர்வு சரிவு
சீனாவின் தொழில் துறை உற்பத்தியானது கடந்த ஆண்டினை காட்டிலும் தற்போது மீண்டுள்ளது. எனினும் தற்போது நுகர்வானது குறைந்துள்ளது. இது சீனாவின் பங்கு சந்தையின் சரிவுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் உலகளாவிய அளவில் சப்ளை சங்கிலியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிளின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கான், தொழில் சாலையை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெஸ்லாவும் அதன் உற்பத்தியினை நிறுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
சீனாவின் முக்கியத்துவம் என்ன?
தற்போதைய நிலையில் சீனாவின் முக்கியத்துவம் கொரோனா வழக்குகள் குறைக்க வேண்டும் என்பதாக இருக்கும். பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படாத அளவுக்கு மெதுவான நகர்த்தலாம். எனினும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியினை ஓமிக்ரான் கட்டுப்படுத்த கூடும். இது கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் என எது செலுத்தினாலும் மக்கள் அதிகம் உள்ள டிராகன் தேசத்தில் கட்டுப்படுத்துவது சற்று கடினமானதாகவே இருக்கும்.
China crushed covid, now covid zero may impact china
China crushed covid, now covid zero may impact china/கோவிட்டை நசுக்கிய சீனா.. சீனாவை ஜீரோ கோவிட் கொள்கை நசுக்கலாம்..!