சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் வரிசையாக வெளியேற்றி பஞ்சாபி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் மார்ச் 26-ஆம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால், தொடக்க பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து முகேஷ் சௌத்ரி வீசிய இரண்டாவது பந்திலும் பவுண்டரி அடிக்க முற்பட்ட நிலையில், கவர் திசையில் ராபின் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். இதனால், பஞ்சாப் அணிக்கு துவக்கத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது. அந்த ஓவரில் 8 ஓட்டங்கள் கசிந்தது.
இந்நிலையில் கிறிஸ் ஜோர்டன் வீசிய இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ராஜபக்ஷா இரண்டு ஓட்டங்கள் ஓட முற்பட்ட நிலையில், கிறிஸ் ஜோட்ரனின் த்ரோவை தோனி, பறந்து பிடித்து ராஜபக்சவை ரன் அவுட் ஆக்கினார்.
இதனைத் தொடர்ந்து லிவிங்ஸ்டன், ஷிகர் தவன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார்கள்.
தவன் 33 ஓட்டங்களுடனும், லிவிங்ஸ்டன் 60 ஓட்டங்களுடனும் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா 26 ஓட்டங்கள், ஷாருக்கான் 6 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 180/8 ஓட்டங்களை குவித்தது.
இதனைத் தொடர்ந்து 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கேவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வைபவ் பந்துவீசினார். பனியின் தாக்கம் இருந்தும் பந்துகளை அசால்ட்டாக இன் ஸ்விங், அவுட் ஸ்விங் செய்து அசத்தினார்.
மற்ற பந்துவீச்சாளர்களும் அபாரமாக பந்துவீசியதால், சிஎஸ்கே தனது டாப் ஆர்தான் ஆட்டக்கார்களை வரிசையாக இழந்து திணற ஆரம்பித்தது. ருதுராஜ் கெய்க்வாட் (1), ராபின் உத்தப்பா (13), மொயின் அலி (0), அம்பத்தி ராயுடு (13) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.
அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் (0) ஏமாற்றினார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷிவம் துபே 30 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். அடுத்து நிதானமாக விளையாடி வந்த தோனியும் 23 (28) ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதனால், சிஎஸ்கே 17.5 ஓவர்கள் முடிவில் 126/10 ஓட்டங்களை மட்டும் சேர்த்து, 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.