முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்களில் 14,880 வீடுகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சமத்துவபுரங்கள் அவல நிலையில் இருப்பதாகவும், அவை சீரமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சமத்துவபுரங்களில் உட்கட்டமைப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை எனக்கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது ரூ 50.04 கோடி திட்ட மதிப்பீட்டில் பெரியார் சிலை பராமரிப்பு, தெரு விளக்கு, சாலை வசதி, நூலகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
முக்கியாக 4 சமத்துவபுரங்கள் 2008-2011 காலக்கட்டத்தில் கட்டப்பட்டு ஒப்படைக்கப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுசார்ந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டம் வானூர்ல் சமத்துவபுரம் தொடக்க விழாவிற்கு முதலமைச்சர் செல்ல உள்ள நிலையில், அரசு இந்த புது வழிகாட்டுதல் மற்றும் சீரமைப்பு குறித்த ஆணையை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது புகார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM