இன்று அதிகாலை 1.10 மணியளவில் திருப்பதியிலிருந்து 85 கிலோமீட்டர் வட கிழக்கில் 3.6 என்கிற குறைவான ரிக்டர் அளவுகோளில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து 85 கிலோமீட்டர் வடகிழக்கில் நள்ளிரவு 1 மணிக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்வு உணரப்பட்ட பகுதி சென்னைக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நில அதிர்வு ஏற்படுத்திய சேத விவரங்கள் ஏதும் தெரியவில்லை. எனினும் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவியது.
இதையும் படிக்க: ராஜஸ்தானில் வெடித்த கலவரம்… 144 உத்தரவு அமல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM