ஜேர்மனியைச் சேர்ந்த ஒருவர் குறைந்தது 87 முறை கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஃப்ரீ பிரஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
தினமும் பல முறை தடுப்பூசி…
Frei Presse செய்தித்தாளின் தகவலின்படி, 61 வயதான நபர் கிழக்கு ஜேர்மனிய மாநிலங்களான Saxony மற்றும் Saxony-Anhalt-ல் உள்ள பல தடுப்பூசி மையங்களுக்கு சென்றுள்ளார்.
சாக்சோனி மாநிலத்தில் மட்டும் 87 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பதிவுசெய்து, வெவ்வேறு தடுப்பூசி தளங்களில் அந்த நபர் ஒரு நாளைக்கு மூன்று முறை தடுப்பூசி பெற்றதாக நம்பப்படுகிறது.
ஒரே குழியில் 300 பிணங்கள்.., உக்ரைனில் சிதறிக்கிடக்கும் அப்பாவிகளின் சடலங்கள்
வசமாக சிக்கினார்
டிரெஸ்டன் நகரில் உள்ள ஒரு மையத்தில் உள்ள ஒரு ஊழியர் அந்த நபரை அடையாளம் கண்டுகொண்டபோது சந்தேகமடைந்தார்.
அடுத்த முறை அவர் Leipzig நகரத்திற்கு வெளியே உள்ள Eilenburg நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் நுழைந்தபோது, ஊழியர்கள் காவல்துறையை அழைத்து அவரை தடுத்து கைது செய்தனர்.
Representative Image: AFP
அவர் தடுப்பூசி கடவுச்சீட்டுகளை விற்பதில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
குற்றவியல் விசாரணைகள் தற்போது சாக்சோனி மாநிலத்தில் நடந்து வருகின்றன, மற்ற ஜேர்மன் மாநிலங்களில் உள்ள அதிகாரிகளும் அந்த நபரை விசாரித்து வருகின்றனர்.
அவர் உண்மையில் எத்தனை முறை கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கை 87 முறையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானில் தெரிந்த நெருப்பு மழை! உண்மையில் அது என்ன? வைரலாகும் வீடியோக்கள்
அவர் எப்படி இவ்வளவு நாள் தப்பித்தார்?
அறிக்கையின்படி, ஒவ்வொரு முறையும் அந்த நபர் தடுப்பூசி போடும் இடத்திற்குள் நுழையும் போது, ஒரு புதிய, வெற்று தடுப்பூசி ஆவணத்தை தன்னுடன் கொண்டு வருவார்.
தடுப்பூசி கிடைத்ததும், கிடைத்த தடுப்பூசி சான்றிதழ்களில் தகவல்களை நீக்கிவிட்டு, அதனை தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு விற்றுள்ளார்.