தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 – 150% வரையில் அதிகரித்துள்ளது.
இந்த சொத்து வரியால் யாருக்கு என்ன பாதிப்பு? முழு விவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தமிழகத்தில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த அதிகரிப்பு செய்யப்படவில்லை என்பது நினைவுகூறத்தக்கது. இதன் காரணமாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவினங்கள் அதிகரித்துள்ளது. ஆனால் வரி வருமானம் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தான் இந்த வரி அதிகரிப்பானது வந்துள்ளது அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு ரூ.1000 முதல் தொழிற்துறை பூங்காக்கள் வரை.. தமிழக பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் அறிவிப்புகள்
பல ஆண்டுகளாக மாற்றமில்லை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே சொத்து வரியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கிடையில் தான் இந்த அதிகரிப்பு வந்துள்ளது. இது குறித்து ஆய்வுக்குழு பரிந்துரைத்த குழுவின் அறிக்கையின் படி, இந்த கட்டணம் அதிகரிப்பானது வந்துள்ளது.
எவ்வளவு அதிகரிப்பு?
தமிழக அரசின் இந்த வரி அதிகரிப்பால் இனி 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டங்களுக்கு 25% சொத்து வரிக் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே 601 – 1200 சதுர அடிக்குள்ளான குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 50% வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே 1201 – 1800 சதுர அடிக்குள் இருக்கும் வீடு அல்லது கட்டிடங்களுக்கு 75% வரியும், 1800 சதர் அடிக்கு அதிகமான பரப்பில் வீடு கட்டியுள்ல கட்டிடங்களுக்கு 100% சொத்து வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கு எவ்வளவு?
தற்போதுள்ள சொத்து வரியில் வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100%மும், தொழில் சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கும் 75% உயர்த்தப்படவுள்ளது.
சாமானிய மக்களுக்கு பாதிப்பில்லை
இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின் போது, குடியிருப்புகளின் பரப்பளவிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக இது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.
பெரு நகரங்களுக்கும் அதிகரிக்கப்படவுள்ளது?
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23-ம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி, சென்னையின் பிரதான நகர பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50%மும், சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25% உயர்த்திடவும், மேலும், சென்னையின் பிரதான நகர பகுதிகளில் உள்ள 600-1,200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75%மும், 1,201-1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100% மும், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 150%மும் உயர்த்தவும், சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1.200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50%மும், 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75%மும், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 100%மும் உயர்த்தப்படுகிறது.
சென்னையின் பிரதான நகர பகுதிகளில் வணிக பயன்பாட்டு
சென்னையின் பிரதான நகர பகுதிகளில் வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 150%மும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 100%மும், சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100%மும், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75% மும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுவும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைவு தான்?
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள இந்த வரி விகிதமானது மற்ற மா நிலங்களோடு ஒப்பிடும்போது இன்னும் குறைவாகத் தான் உள்ளது. அப்படியே அதிகரித்திருந்தாலும் இது அடித்தட்டு மக்களுக்கு பெரியதாக தாக்கத்தினை கொடுக்காது. எனினும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் சாலைகளுக்கு கட்டணம் அதிகரிக்கும்போது அது அவர்களுடைய செலவினங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.
Tamil Nadu government’s property tax increase: What is the impact on whom?
Tamil Nadu government’s property tax increase: What is the impact on whom?/தமிழக அரசின் சொத்து வரி அதிகரிப்பு.. யாருக்கு என்ன பாதிப்பு.. !