துரோகிகளை அடையாளப்படுத்துங்கள்… பொதுமக்களுக்கு தொலைபேசி இலக்கத்தை அறிவித்த புடின்


உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக விமர்சனம் மேற்கொள்ளும் நண்பர்கள், உறவினர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய விவகாரத்தில் சிறப்பு தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ள ரஷ்ய நிர்வாகம், உண்மையான ரஷ்ய குடிமக்கள் இணைய பக்கம் ஊடாகவும் துரோகிகளை அடையாளப்படுத்த கோரியுள்ளார்.

இந்த முடிவு, ரஷ்யாவை 1937 காலகட்டத்திற்கு இட்டுச்சென்றதாக விளாடிமிர் புடின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
சோவியத் கால சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் தங்களது கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக பேசும் பொதுமக்கள் மீது நடவடிக்கை முன்னெடுக்க இதேபோன்ற யுத்திகளை பயன்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, 1936 முதல் 1938 வரையான காலகட்டத்தில் குறித்த கடும்போக்கு நடவடிக்கையால் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் அதே கடும்போக்கு நடவடிக்கையை விளாடிமிர் புடின் தற்போது முன்னெடுக்க உள்ளார்.
அளிக்கப்படும் தகவல்கள் மற்றும் புகார் தெரிவிப்பவர்களின் பெயர்கள் இரகசியம் காக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மாஸ்கோவில் 22 வயது இளைஞர் ஒருவர், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான விமர்சனம் முன்வைத்ததாக கூறி 24 மணி நேர சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

இதேப்போன்று, மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட விவாதம் ரஷ்யாவுக்கு எதிராகவும் இராணுவத்தை குறைமதிப்பிட்டதாகவும் கூறி இளம் பெண் ஒருவர் இரவு முழுவதும் சிறை வைக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் தற்போது பொதுமக்கள் கடும் பீதியில் வாழ்ந்து வருவதாகவும், 1937 காலகட்டத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்ய மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.