போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 18,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 39-வது நாளாக தொடர்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் தங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 18,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகள் இடையேயான போரில் 7,000 முதல் 15,000 வரை ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக நேட்டோ அமைப்பு மதிப்பிட்டிருந்த நிலையில், பலியான ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.