தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும்
தனுஷ்
சமீபகாலமாக ஒரு ஹிட் படத்திற்காக போராடி கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே மற்றும் மாறன் ஆகிய படங்களில் OTT யில் வெளியாகி படுதோல்வி அடைந்தன.
எனவே தான் நடித்த கடைசி மூன்று படங்களும் சொதப்பியதால் தற்போது கட்டாய வெற்றியை பெறவேண்டிய சூழலில் தனுஷ் உள்ளார். இந்நிலையில் தற்போது
வாத்தி
,
திருச்சிற்றம்பலம்
,
நானே வருவேன்
ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகின்றது. மேலும் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பீஸ்ட் ட்ரைலரை கலாய்த்த பிரபல தொலைக்காட்சி ? வைரலாகும் பதிவு..!
எனவே இந்த படங்கள் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என நம்பிக்கையுடன் வேலை செய்துவருகின்றார் தனுஷ். இந்நிலையில் முண்டாசுப்பட்டி மற்றும்
ராட்சசன்
ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டது.
ராட்சசன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்து ஒட்டுமொத்த சினிமா உலகையும் திரும்பி பார்க்கச்செய்தார் ராம்குமார். அதையடுத்து அவர் தனுஷிற்காக ஒரு கதையை ரெடி செய்தார். ஆனால் சில காரணங்களால் தனுஷ் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
தனுஷிற்காக பல மாதங்கள் கதையை உருவாக்கி கொண்டிருந்த வேளையில் தனுஷ் தற்போது நடிக்க மறுத்துள்ளது ராம்குமாரை அதிர்ச்சியாக்கியுள்ளதாம். இந்நிலையில் தற்போது ராம்குமார் அக்கதையை வேறொரு ஹீரோவை வைத்து இயக்கும் முயற்சிகளில் இறங்கியள்ளதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!
அடுத்த செய்திதனுஷுக்கு அடித்த ஜாக்பாட்: புஸ்ஸா போன லதாவின் பிரம்மாஸ்திரம்