கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சாங்சுன், ஜிலின்,
ஷாங்காய்
உள்ளிட்ட நகரங்களில்
முழு ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை.
இந்நிலையில், சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 13 ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஷாங்காய் நகரில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சீனாவில் பதிவாகும் ஒட்டுமொத்த கொரோனா தினசரி பாதிப்பில், ஷாங்காயில் இருந்து மட்டும் சுமார் 70 சதவீதம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
பாக். நாடாளுமன்றம் கலைப்பு – 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல்!
கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து பதிவாகும் அதிகபட்ச கொரோனா தினசரி பாதிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காயில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முழு ஊரடங்கு அறிவிப்பால், ஷாங்காய் நகர மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி போயுள்ளனர்.
இதற்கிடையே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த சீன அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா கட்டுக்கடங்காமல் பரவுவதால், நாடு முழுதும் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
அடுத்த செய்திபாக். நாடாளுமன்றம் கலைப்பு – 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல்!