எதிர்க்கட்சியான பி.எம்.எல். (என்) கட்சியை சேர்ந்த சவுத்ரி முகமது சர்வாரை பிரதமர் இம்ரான்கான் நீக்கம் செய்துள்ளார். அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் புதிய கவர்னரை தேர்வு செய்யும் பணி பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கவர்னர் சவுத்ரி முகமது சர்வார் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு முன்பாக இம்ரான்கான் பல நடவடிக் கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. இதில் ஒரு பகுதியாக பஞ்சாப் மாகாண கவர்னர் நீக்கப்பட்டுள்ளார்.