கஜகஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டு உளவாளி ஒருவரை கைது செய்துள்ளதாக கஜகஸ்தானின் பாதுகாப்பு சேவைகள் தெரிவித்துள்ளன.
கஜகஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில் “ஒரு வெளிநாட்டு உளவாளி, கஜகஸ்தான் குடிமகன், மார்ச் 25 அன்று நூர்-சுல்தானில் உள்நாட்டு உளவு சேவைகளால் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் “கஜகஸ்தானின் ஜனாதிபதி மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராகவும், சிறப்பு சேவைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, போதைப்பொருள் மற்றும் பெருந்தொகை பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வாக்குமூலம் அளித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சோவியத் குடியரசு மற்றும் மத்திய ஆசியாவின் பணக்கார நாடான கஜகஸ்தான், ஜனவரி தொடக்கத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அமைதியான போராட்டங்களில் தொடங்கி, இரத்தக்களரி மோதல்கள் மற்றும் கொள்ளைகள் என வன்முறையில் இறங்கியது.
இந்த வன்முறை சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் ரஷ்யா தலைமையிலான பாதுகாப்பு முகாமில் இருந்து துருப்புக்களை மீண்டும் கட்டுப்பாட்டை நிறுவ அழைத்தார்.
கஜகஸ்தான் வன்முறையை “பயங்கரவாத குழுக்களின்” தாக்குதலாக வடிவமைத்துள்ளது மற்றும் நிகழ்வுகளை வெளிநாட்டு ஊடகங்கள் கவரேஜ் செய்ததை விமர்சித்துள்ளது.