பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை எட்டு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி பலரை காணவில்லை என்றும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவப்படை ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேவைப்பட்டால் இரவு முழுவதும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர அவசரகால பணியாளர்கள் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேயர் பெர்னாண்டோ ஜோர்டாவோ தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்..
இந்தியாவில் மேலும் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு – 81 பேர் பலி