வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரியோ டி ஜெனிரோ,-பிரேசிலில் தொடரும் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகி உள்ளனர். பலரும் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
![]() |
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:ரியோ டி ஜெனிரோ மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
பரெட் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தந்தை மற்றும் அவரது, 2 – 17 வயது வரையிலான ஏழு குழந்தைகள் பலியாயினர். கடலோர நகரமான போன்டா நெக்ராவில் நிலச்சரிவால் ஏழு வீடுகள் பலத்த சேதம் அடைந்தன; இதில் நால்வர் காயம் அடைந்தனர்.மெஸ்கிடா நகரில் மூன்று நாட்களாக தொடரும் மழையில், 38 வயதுடைய ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
![]() |
ஒட்டு மொத்தமாக மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ளனர். மாயமானோர் குறித்த விபரங்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement