இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிய கோவிட் மரபணு மாற்றம் எக்ஸ் இ வேகமாகப் பரவி வருவதை கண்காணித்து வருவதாகவும் மக்கள் பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை என்றும் மரபணு ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓமைக்கரானின் திரிபு வடிவமாக இந்த புதிய வைரஸ் உள்ளது.ஓமைக்கரானை விடவும் 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாடா மரபணு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா, ஜனவரி மாத மத்தியில் முதன் முதலாக இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் உலகளவில் இதுவரை 600 பேரை பாதித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இது மேலும் ஒரு கொரோனா அலையை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வலிமையானது என்றும் இதன் தன்மையை அறிய இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டும் என்றும் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.முகக்கவசம், தடுப்பூசி பூஸ்டர் ஊசி போன்றவற்றை தொடர வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்