சென்னையில் இருந்து வேலூருக்கு பேருந்தில் சென்ற பெண் ஒருவர், தன்னை தகாத முறையில் தொட முயன்ற நபரை சேஃப்டி பின்னாள் குத்தி பதிலடி கொடுத்துள்ளார். அதோடு இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த பெண், அந்த நபரை கைது செய்யுமாறு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
28 வயது பெண் தன்னுடைய தாயாருடன் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து வேலூருக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பெண் தனது இறுக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த நபர், இருக்கை வழியாகச் தகாத முறையில் தன்னைத் தொட்டதாகக் குற்றம் சாட்டினார்.
பயணிகள் ஏறிய பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, அந்த நபர், அந்த பெண்ணை தொந்தரவு செய்யத் தொடங்கினார்.
முதலில் அந்த நபர் தெரியாமல் தவறுதலாகத் தொட்டதாக நினைத்த அந்தப் பெண், சிறிது நேரம் கழித்து அந்த நபர் மீண்டும் தகாத முறையில் தொட முயன்று தூங்குவது போல் நடித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண், சேஃப்டி ஊக்கால் அந்த நபரின் கையை குத்தி, தைரியமாக எதிர்கொண்டுள்ளார்.
ஆனால், அந்த நபர் பிரச்னை செய்தபோது, சில பயணிள் தாங்கள் தாமதாமாக வந்ததாகக் கூறி, அந்த பெண்ணின் புகாரை நிராகரிக்க முயன்றனர். மேலும், பெண்ணிடம் அந்த நபரை பேருந்தில் இருந்து இறக்கிவிட வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆனால், அந்தப் பெண் அந்த நபரை கீழே இறக்கிவிட ஒப்புக்கொள்ளாமல், காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற குற்றங்களை விடக்கூடாது. அது குற்றவாளிகளை தைரியம் அளிப்பதைப் போல ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு செய்த குற்றவாளியைக் கைது செய்தனர். போலீசாரிடம், அந்த நபர் தன்னை தகாத முறையில் தொட்டு தொந்தரவு செய்த வீடியோவை போலீசாரிடம் காட்டியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஒரு பெண் புகார் அளிக்கும் போதெல்லாம், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதனால்தான், அந்த வீடியோவை நான் எடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணையில் அந்த நபர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராகவன் (40) என்பது தெரியவந்தது.
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க பாயின்ட் டு பாயிண்ட் பேருந்துகளில் பேருந்து நடத்துனர்களை நியமிக்க வேண்டும் என்றும் அந்த பெண் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“