பொது வெளியில் முக கவசம் அணிய கட்டாயமில்லை – அரியானா அரசு

அரியானாவில் மக்கள் பொது வெளிகளில் முக கவசம் அணிய கட்டாயமில்லை என அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியிடம், மற்றும் பொது வெளிகளில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது உடனடி நடவடிக்கையாக திரும்பப் பெறப்படுவதாகவும், முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து இனி அபராதத் தொகை வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தொற்று பரவாமல் இருக்க முக கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.