சென்னை: மாநில வளர்ச்சிக்கு துணை நிற்கும் தமிழக அரசின் செயல்பாடுகள்தான் திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்திற்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும் எனவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை ரூ.68,375.54 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்ட்டுள்ளன எனவும் முதல்வர் கூறியுள்ளார்.