தங்கவயல், : பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து பகல் 2:50 மணிக்கு புறப்பட்டு, மாரிகுப்பத்துக்கு செல்லும் ரயிலும், மாரிகுப்பத்திலிருந்து அதிகாலை புறப்பட்டு, பெங்களூரு சிட்டி வரும் ரயிலும் இயக்க தென் மேற்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவலால் இரண்டு ஆண்டுகளுக்கு முன, தங்கவயல் பகுதியில் தினமும் இயங்கி வந்த ரயில்கள் உட்பட ஏராளமான ரயில்கள் நிறுத்தப்பட்டது.
கொரோனா தொற்று கட்டுக்குள் அடங்கிய பின், பல ரயில்கள் இயக்கப்பட்டன. ஆயினும், மாரிகுப்பத்திலிருந்து- பெங்களூரு சிட்டி செல்லும் அதிகாலை ரயிலை இயக்காமல் இருந்து வந்தனர்.இந்த ரயிலை இயக்கும்படி, கோலார் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு சமூக அமைப்பினர், தினப்பயணிகள் சங்கத்தினர் உட்பட பலர் ரயில்வே துறையை வலியுறுத்தி வந்தனர். ஒரு வழியாக, இந்த ரயிலை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.பெங்களூரிலிருந்து பகல் 2:50 மணிக்கு புறப்பட்டு, மாலை 5:15 மணிக்கு மாரிகுப்பம் சென்றடையும் ரயில் வரும் 8 முதல் இயக்கப்படுகிறது.வரும் 9 அதிகாலை 4:15 மணிக்கு மாரிகுப்பத்தில் இருந்து புறப்பட்டு காலை 6:35 மணிக்கு பெங்களூரு சிட்டியை சென்றடையும்.இந்த ரயில்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படும். ஞாயிறு அன்று இயங்காது. இதனால் தங்கவயல் தினப்பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Advertisement