மிசோரம் மாநிலத்தில் புதிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்ய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
அடுத்த உத்தரவு வரும் வரை, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து உயிருள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்பட அனைத்து பன்றி இறைச்சி பொருட்கள் இறக்குமதிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று மிசோரம் அரசு அறிவித்துள்ளது.
மேலும், பன்றி வளர்க்கும் இடங்களில் கிருமி நீக்கம் செய்வதை உறுதி செய்வதோடு, கடுமையான சுகாதார நடவடிக்கைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பன்றிகளை தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிகள் ஏதேனும் அசாதாரணமாக உயிரிழந்தால் அதுகுறித்து உடனடியாகத் தெரிவிக்க 0389-2336441, 9436142908, 9436151203 மற்றும் 8794206212 ஆகிய உதவி எண்களையும் மிசோரம் அரசு வழங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்.. உக்ரைனில் ஒரே இடத்தில் 300 உடல்கள் புதைப்பு: தெருக்களில் சிதறிக் கிடக்கும் உடல்கள்