ரஷ்யா ஆக்கிரமிப்பை தடுக்க தங்கள் நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த தயாராக இருப்பதாக பிரபல ஐரோப்பிய நாடும் நேட்டோ உறுப்பினர் நாடான போலந்து தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது 39வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் துறைமுக நகரான Odesa மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள மேற்கத்திய நாடுகள், உக்ரைன் அதன் பிராந்தியத்தை பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளன.
ஒரு பக்கம் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் உக்ரைன் மீது ரஷ்ய அணு ஆயுத தாக்குதலை நடத்த வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க தங்கள் நாட்டில் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த தயாராக இருப்பதாக போலந்து துணை பிரதமர் Jaroslaw Kaczynski தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை சுருட்டி 7வது முறையாக உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா!
போலந்தில் அமெரிக்க அணு ஆயுதத்தை வைத்திருக்க அமெரிக்கர்கள் அனுமதி கோரினால், நாங்கள் அதற்கு அனுமதிக்க தயாராக இருக்கிறோம் என Jaroslaw Kaczynski தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு அணு ஆயுதங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், ரஷ்யா 5,977 அணு ஆயுதங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்திலுள்ள அமெரிக்கா 5,428 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது.
அமெரிக்காவை தொடர்ந்து சீனாவிடம் 350, பிரான்சிடம் 290, பிரித்தானியாவிடம் 225, பாகிஸ்தானிடம் 165, இந்தியாவிடம்160, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 20 அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க அமைப்பு கூறியுள்ளது.