ராமநாதபுரத்தில் வாகன சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை பறிமுதல் செய்த போலீசார், அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் இருந்து பசும்பொன் நகர் ரயில்வே கேட் அருகில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழக்கரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த யூசுப் சுலைமான் என்பவர் போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகம் அடைந்த போலீசார் யூசுப் சுலைமானை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், 2 பாலித்தீன் பைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 160.08 கிராம் வைரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தான் ஒரு வைரவியாபாரி என்று, முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதை அடுத்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து ராமநாதபுரம் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM