
லைகர் படத்திற்கு டப்பிங் பேசிய மைக் டைசன்!
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள படம் லைகர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் இடையில் ஒரு ஆக்ஷன் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சியை அமெரிக்கா சென்று படமாக்கினார்கள். இப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முதல் முறையாக இந்திய படத்தில் நடித்துள்ள மைக் டைசன் இந்த லைகர் படத்தில் தான் நடித்துள்ள காட்சிகளுக்காக தற்போது டப்பிங் பேசி முடித்திருக்கிறார். அதோடு தன்னிடம் தன்மையாக நடந்து கொண்டதற்கு நன்றி. மிக உன்னதமாக இந்த அனுபவத்தை கருதுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.