வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திறக்கப்பட இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் இருக்கும் வாழப்பாடி அருகே உலகத்திலேயே மிக அதிக உயரம் கொண்ட முருகன் சிலை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாக நிர்வாகிகள் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியை சேர்ந்த முத்து நடராஜன் புத்திர கவுண்டன் பாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகில் மலேசியாவில் இருப்பதைப் போன்ற முருகன் சிலையை வடிவமைக்க முடிவெடுத்துள்ளார். திருவாரூர் பகுதியைச் சேர்ந்த கலைஞரை அழைத்து 3 கோடி ரூபாய் செலவில் இந்த சிலையை கட்ட முடிவு எடுத்துள்ளார்.
அதன்படி கடந்த 2016 செப்டம்பரில் துவங்கிய இந்த பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2018-ல் உடல்நலக்குறைவால் முத்து நடராஜன் இறந்த போதும் கூட அவரது குடும்பத்தினர் இந்த பணியை தொடர்ந்துள்ளனர்.
இத்தகைய நிலையில், இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது. இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டு அனைவரும் முருகனின் அருளை சேருங்கள்.
கந்தனுக்கு அரோகரா.!