மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், கமலா நேரு உயிரியல் பூங்காவில் விலங்குகளை பாதுகாக்கும் வகையில் ஏசி, வாட்டர் கூலர் மற்றும் தண்ணீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்காவில் உள்ள விலங்குகள் தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் அருந்தும் வகையில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு இருப்பதுடன் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளுக்கு நீர் நிலைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் கூண்டுகளில் வாட்டர் கூலர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பறவைகளை வெப்பத்தில் இருந்து காக்க அவற்றின் கூண்டுகள் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும், மான்கள் உடல் வெப்பத்தை தணித்துக்கொள்ள சேற்றுக்குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.