விடுதலை சிறுத்தைகட்சியில் மாவட்ட நிர்வாகம் மாற்ற முடிவு- திருமாவளவன் தேர்வு செய்கிறார்

சென்னை:

விடுதலை சிறுத்தை கட்சியில் 3 வருடத்திற்கு ஒரு முறை கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால் தேர்தல் நடத்தப்படவில்லை.

கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழா இந்த ஆண்டு ஆகஸ்டு 17-ந்தேதி கொண்டாடப்படுவதால் அதற்கு முன்னதாக கட்சி கட்டமைப்பில் மாற்றங்களை செய்ய அவர் முடிவு செய்தார்.

விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாக ரீதியாக 90 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகத்தை மாற்றியமைக்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட துணை செயலாளர், செய்தி தொடர்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டமும் 3 தொதிகள் அல்லது 2 தொகுதிகளை உள்ளடக்கி செயல்படுகிறது.

தற்போது உள்ள மாவட்ட செயலாளர்களில் சிறப்பாக செயல்படுபவர்கள், திருப்திகரமாக அவரது பணி இருக்கும் பட்சத்தில் அவர் தொடர்ந்து நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

கட்சி பணிகளை முறையாக செய்யாத மாவட்ட செயலாளர்கள், மாவட்டத்தில் உள்ள தொண்டர்களை அனுசரித்து செல்லாத மற்றும் பல்வேறு புகாருக்கு ஆளானவர்களை மாற்றிவிட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கவும் திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் தொகுதி செயலாளர்கள் மாற்றம் செய்யப்படுகிறார்கள். கட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தகக்ககூடிய வகையில் செயல்படும் தொண்டர்களை தேர்வு செய்வதில் திருமாவளவன் ஆர்வம் காட்டுகிறார்.

இது குறித்து தென் சென்னை மவாட்ட செயலாளர் நா.செல்லத்துரை கூறியதாவது:-

மாவட்ட நிர்வாகத்தை மாற்றி அமைப்பதற்கான தேர்தலுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.கட்சியை மேலும் வலுப்படுத்துவதில் தலைவர் தீவிரமாக உள்ளார்.

அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படக்கூடிய மாவட்ட செயலாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் கட்சி பணியில் திருப்தி இல்லாதவர்கள் மாற்றம் செய்யப்படுகிறார்கள். கட்சியின் உயர் மட்ட குழுவின் கருத்துக்களை கேட்டு மாவட்ட நிர்வாகம் மாற்றியமைக்கப்படுகிறது. மே மாதத்தில் புதிய மாவட்ட நிர்வாகம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்… சொத்துவரி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.