இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் இந்தியா பல உதவிகளைச் செய்து வருகிறது.
இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..!
இதற்கிடையில் இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசல் சனிக்கிழமையன்று இலங்கைக்குக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டு உள்ளது.
இலங்கை
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகப்படியான மின்வெட்டு-ஐ அந்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதை முதலில் குறைக்க வேண்டும் என இலங்கை இந்தியாவிடம் உதவியை நாடிய நிலையில் இந்தியா நான்காவது முறையாக டீசல்-ஐ அளித்துள்ளது.
மின்வெட்டு
வியாழனன்று 13 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டு இருந்தது. இது 1996 ஆம் ஆண்டு மாநில மின் நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட போது 72 மணி நேர மின்தடையை ஏற்பட்டது. இதன் பின்னர் மிக நீண்ட மின்வெட்டாக இந்த வியாழனன்று 13 மணி நேர மின்வெட்டு விளங்குகிறது.
இலங்கை மின்சாரப் போர்டு
இந்திய டீசல் விநியோகம், தற்போது நிலவும் மின்வெட்டு நேரத்தைக் குறைக்கப் பெரிய அளவில் உதவும் என அந்நாட்டு அரசு எரிபொருள் நிறுவனமான இலங்கை மின்சாரப் போர்டு (CEB) அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை இலங்கையில் 8.5 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பொருளாதார வீழ்ச்சி
இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது, வருவாய், வர்த்தகம் அனைத்தும் குறைந்த காரணத்தால் அந்நாட்டில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல உற்பத்தி இல்லாத காரணத்தாலும், மின்சாரத் தடையாலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது.
மக்கள் போராட்டம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவிலான போராட்டம் நடத்த அறிவித்திருந்த நிலையில், சனிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊடரங்கை அறிவித்தது உள்ளது இலங்கை அரசு.
40,000 MT diesel from India reaches SriLanka helps to cut powercut
40,000 MT diesel from India reaches SriLanka helps to cut powercut விளிம்பில் இருக்கும் இலங்கை.. 40000 மெட்ரிக் டன் டீசல் கொண்டுபோய்ச் சேர்ந்தது இந்தியா..!